Kongu Nadu | கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்..

Youtube Video

சமீப நாட்களில் திமுக, பாஜக போன்ற கட்சிகளின் கவனம் கொங்கு மண்டலம் மீது திரும்பியிருக்கிறது. இதற்கான காரணம் தான் என்ன?

  • Share this:
    கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக-வும், பாஜக-வும் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அதேநேரத்தில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மிக வலுவான தலைவர் இல்லாததால், அதிமுக-வால் இனி பெரிய அளவிலான வெற்றியை பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

    எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுக-வின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களை கொங்கு மண்டலத்தில்தான் அதிமுக கைப்பற்றியது. இந்த சூழலில் கொங்கு மண்டலத்தில் தங்களை பலப்படுத்தும் பணிகளை திமுக-வும், பாஜக-வும் தீவிரப்படுத்தியுள்ளன.

    ஏற்கனவே பாஜக-வில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், ஏ.பி.முருகானந்தம், கனகசபாபதி என பலருக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகவும், அண்ணாமலை மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல, திமுக-வும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரனை, தங்கள் பக்கம் சேர்த்துள்ளது. தேர்தலுக்கு முன்னரே மகேந்திரன் திமுகவில் இணைந்திருந்தால் கோவையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியும் என்று வெளிப்படையாகவே திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.



    அரசியல் கட்சிகளின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கொங்கு மண்டலத்தில் பாஜக ஏற்கனவே வலுவாக இருப்பதாக தெரிவித்தார். எல்.முருகனுக்கும், அண்ணாமலைக்கும் பதவி கொடுத்தது ஏதேச்சையாக நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க...  சென்னையில் இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திய காதல் ரோமியோ கைது...

    அதிமுக-வில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மிக வலுவான தலைவரை கொண்டுவர முடியவில்லை என்றும், மீண்டும் அவர்களால் மிகப்பெரிய வெற்றியை பெற முடியுமா என்பது சந்தேகமே என்றும் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜக-வின் இலக்கு என்றும், 2026-ம் ஆண்டில் தனித்துப் போட்டியிட விரும்புவதாகவும் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.
    Published by:Vaijayanthi S
    First published: