• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்!

அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்!

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஐபிஎஸ்,

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஐபிஎஸ்,

அரசியல் ரீதியில் கொங்கு மண்டலமானது அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. எம்.ஜி.ஆர் காலம் முதலே கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தல் வரை இது எதிரொலித்தது.

  • Share this:
சமீப நாட்களில் திமுக, பாஜக போன்ற கட்சிகளின் கவனம் கொங்கு மண்டலம் மீது திரும்பியிருக்கிறது. இதற்கான காரணம் தான் என்ன? சற்று விரிவாக பார்க்கலாம்.

கொங்கு மண்டலம் என்றால் என்ன?

தமிழகத்தில் மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு என நான்கு மண்டலங்கள் உண்டு. இதில் மேற்கு பகுதியை கொங்கு மண்டலம் என்றும் அழைக்கின்றனர். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் சேலம் மாவட்டங்களுடன், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது மேற்கு மண்டலம். இந்த மண்டலம் 57 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிப்பதால் மேற்கு மண்டலமானது கொங்கு மண்டலம் என பெயர் பெற்றுள்ளது.

அரசியல் ரீதியில் கொங்கு மண்டலமானது அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. எம்.ஜி.ஆர் காலம் முதலே கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தல் வரை இது எதிரொலித்தது.

Also Read:   ரஜினி போல ஸ்டைல் செய்து கெத்து காட்ட நினைத்து மேடையில் பல்பு வாங்கிய நபர் - வைரல் வீடியோ!

அரசியல் கட்சிகளின் டார்க்கெட்:

இப்படியாக அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் கொங்கு மண்டலத்தின் மீது திமுகவும், பாஜகவும் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

திமுக:

கொங்கு மண்டலத்தில் திமுக வீக்காக இருப்பதாகவும், அக்கட்சிக்கு பிற மண்டலங்களில் இருப்பதைப் போன்று பலமான தலைவர்கள் அங்கு இல்லை என்பதுமே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த பலவீனத்தை சரிக்கட்ட இதுவே தக்க தருணம் என திமுக தலைமை உணர்ந்திருக்கிறது. இதன் எதிரொலியாகவே மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த, கமல்ஹாசனுக்கு நெருக்கமானவராகவும் திகழ்ந்த மகேந்திரனை திமுக வளைத்துப் போட்டிருக்கிறது. பலமான தொண்டர்படையை கொண்ட மகேந்திரனின் வருகை அக்கட்சியை நிச்சயம் அம்மண்டலத்தில் பலப்படுத்தும் என்றே சொல்லப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்திலிருந்து மகேந்திரன் விலகிய போது பல மாவட்டங்களிலும் வரிசையாக நிர்வாகிகள் ராஜினாமா செய்தது அவருடைய பலத்தை காட்டுவதாக அமைந்தது.

தொழிலதிபரான மகேந்திரன் மூலமாக கொங்கு மண்டல மண்டல தொழிலதிபர்களும் இனி திமுகவை நோக்கி வரலாம் என கூறப்படுகிறது.

Also Read:   டி20 போட்டியில் இரட்டை சதம்: சத்தமில்லாமல் சாதித்த இந்திய வீரர்!

பாஜக:

பாஜகவை பொறுத்தவரையில் கன்னியாகுமரிக்கு அடுத்ததாக கொங்கு மண்டலத்தை எப்போதும் தனது செல்வாக்கான பகுதியாகவே கருதுகிறது. அக்கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கியும் இங்கு இருக்கிறது. அதே போல கொங்கு மண்டலம் மீதான கவனத்தை அக்கட்சி முன்னதாகவே தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.

கொங்கு மண்டலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரான எல்.முருகன் கடந்த ஆண்டு அக்கட்சியின் மாநில தலைவராக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மத்திய அமைச்சராக்கியிருக்கிறது பாஜக.

மேலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை தற்போது மாநில தலைவராக்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் 4 தொகுதிகளில் இரண்டு கொங்கு மண்டலத்தில் தான் இருக்கிறது.

இப்படி அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த கொங்கு மண்டல நகர்வுகள், அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: