Home /News /tamil-nadu /

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள்

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள்

திமுக அமைப்பு செயலாலர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், திமுக சார்பில் இதுவரை அளித்துள்ள 6 மனுக்கள் பதில் வரவில்லை எனவும், ஆனால், அதிமுக கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் வருகிறது என்றார்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய குழுவினரிடம் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.  

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இதையடுத்து, தேர்தல் முன்னேற் பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தபிரதிநிதிகள் சுனில் அரோரா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சென்னை வந்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்து இந்திய தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசினார்.

இக்கூட்டத்தில், அதிமுக சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், வழக்கறிஞர்மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில துணைத் தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் பிரிவு நவாஸ், தேமுதிக சார்பில் தலைமை நிலையச்செயலாளர்பார்த்தசாரதி, வழக்கறிஞர் ஜனார்த்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் ராகவன், தேர்தல் பொறுப்பாளர்ஓம் பதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்பி ரங்கராஜன் உள்ளிட்ட 10 அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு கட்சியினரும் தனித்தனியாக இந்திய தேர்தல் ஆணையம் சுனில் அரோராவிடம், தங்கள் கட்சியின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

கூட்டத்திற்கு பின், அதிமுக சார்பில் பேட்டி அளித்த பொள்ளாட்சி ஜெயராமன், வெயில் தாக்கம் காரணமாக ஏப்ரல் 4ம் வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் பந்தல், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக தெரிவிததார். 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் முறையை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், அரசு விளம்பரம் தொடர்பான கேள்விக்கு, அரசின் பணிகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதை தான் அரசு செய்கிறது என்றார்.

தொடர்ந்து திமுக அமைப்பு செயலாலர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், திமுக சார்பில் இதுவரை அளித்துள்ள 6 மனுக்கள் பதில் வரவில்லை எனவும், ஆனால், அதிமுக கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் வருகிறது என்றார். இது ஒரு தலைபட்சமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி உள்ளதாகவும், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக திமுகவின் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள  மாதவரத்தில் பாதுகாப்பின்றி இருப்பதையும், வாக்காளர் பட்டியல் இன்னுமும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை என்பதை சுட்டிகாட்டி உள்ளதாகவும் கூறினார்.

Also read... அரசை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை: பின்வாங்கியது மத்திய அரசு

மேலும், அரசு பணத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். எந்த நேரத்தில் தேர்தல் வைத்தாலும் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் பா.ஜ.க சார்பில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். தமிழ் புத்தாண்டு நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு சலுகையில், சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவார்கள் என்பதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, கவனமாக கையாள வேண்டும் உள்ளிட்ட 14 கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தல் பார்வையாளர்கள் வேறு மாநிலத்தில் இருந்து அழைத்து வர வேண்டும்.  தேர்தல் நடத்துவதற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்க வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகளை அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக சார்பில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை இன்றி தேர்தல் நடைபெற வேண்டும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். செயல்படுத்தக் கூடிய அறிக்கையை மட்டுமே கட்சிகள் வெளியிட வேண்டும் இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளதால், பாண்டிச்சேரியிலும் முரசு சின்னத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரசு விழாவிற்காக கோடி கணக்கில் விளம்பரம் மற்றும் பிரச்சார செலவுகளை தடுக்க வேண்டும். 6 மாதத்திற்கு முன் அரசு சார்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும். மதம், ஜாதி சார்ந்த பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தேர்தல் நேரத்தில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது தொடர் நடவடிக்கை இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Election Commission, Election commission of India

அடுத்த செய்தி