ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசியல், கல்வி, மதம் தொடர்பான கூட்டங்களுக்கு தடை - தமிழக அரசு

அரசியல், கல்வி, மதம் தொடர்பான கூட்டங்களுக்கு தடை - தமிழக அரசு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நவம்பர் 16-ஆம் தேதி முதல் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட அரசியல் கூட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

  ”அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவரப்பட்டுள்ளது.

  தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை வாங்க கடைவீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகமாக கூடுகின்றனர். அவ்வாறு கூடும்போது, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாது இருப்பது, ஊடகங்கள் வாயிலாகவும், களஆய்வுகள் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு தெரிய வருகிறது.

  வெளிநாடுகளில் கொரொனா நோய்த் தொற்றானது இரண்டாம் அலையாக மீண்டும் பரவும் நிலையை நாம் காண முடிகின்றது.  இச்சூழ்நிலையில் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16.11.2020 முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது இரத்து செய்யப்படுகிறது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுகிறது.

  இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்லது.

  Published by:Gunavathy
  First published:

  Tags: ADMK Govt, DMK, Govt School, Political party, Tamilnadu government