விவேக் விரைவில் குணமடையவேண்டும் - மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன்

விவேக் விரைவில் குணமடையவேண்டும் - மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன்

நடிகர் விவேக்

நடிகர் விவேக் விரைவில் குணமடையவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    நகைச்சுவை விவேக் இன்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. 24 மணி நேரம் கழித்தே உறுதியாக தெரிவிக்கமுடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நேற்று கொரோனா தடுப்பு மருந்து போட்ட விவேக் இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் தடுப்பூசிதான் காரணம் என்று வதந்தி பரவியது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘விவேக்குக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று விளக்கமளித்தார். இந்தநிலையில், விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துவருகின்றனர்.


    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்’ என்று குறிப்பிடுள்ளார்.


    இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘நடிகர் திரு. விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    டி.டி.வி.தினகரன் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன். தனது திறனால் லட்சோப லட்சம் பேரை மகிழ்வித்துவந்த அவரது பணி மீண்டும் தொடர்ந்திட பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: