• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்... தலைவர்கள் அறிக்கை

ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்... தலைவர்கள் அறிக்கை

ஆயுத பூஜை

ஆயுத பூஜை

பொருளாதார சுணக்கங்கள் நீங்கி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என அண்ணாமலை வேண்டுதல்

  • Share this:
    ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் தமிழக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    உண்மை, நன்மை மற்றும் நேர்மை ஆகிய நற்பண்புகளை நாம் நிலைநிறுத்தவும்,  நம் குடும்பங்களில் என்றும் காணாத வளத்தையும், வளர்ச்சியையும் காணவும் விஜயதசமி நன்னாளின் வருகை நம் வாழ்வில் புதிய ஆற்றலின் தொடக்கத்தை அறிவிக்கட்டும் என்றும் கூறியுள்ளார். இத்திருவிழா நம் மாநிலத்திலும், நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், வளம் மற்றும் நல்ல உடல் நலத்தை நல்கட்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    வளங்கள் பெருகி பொருளாதார சுணக்கங்கள் நீங்கி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: