Home /News /tamil-nadu /

அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல்...!

அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல்...!

  • News18
  • Last Updated :
    திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    திமுகவின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் காலமானார்.

    அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, திமுக நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பால கிருஷ்ணன், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.







    Published by:Sankar
    First published:

    Tags: Anbazhagan

    அடுத்த செய்தி