Home /News /tamil-nadu /

'மண்டைய உடைச்சிடுவேன்' .. செய்தியாளரை மிரட்டிய சீமான்... வைரலாகும் வீடியோ

'மண்டைய உடைச்சிடுவேன்' .. செய்தியாளரை மிரட்டிய சீமான்... வைரலாகும் வீடியோ

'மண்டைய உடைச்சிடுவேன்' .. செய்தியாளரை மிரட்டிய சீமான்... வைரலாகும் வீடியோ

பெரியார் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்கூடாது என்று கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளருடன் காரசாரமாக விவாதித்து மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    குடிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ''எந்த சாதி குடிகளின் அடிப்படையில் கல்வி , வேலைவாய்ப்பு , அரசியல் அதிகாரம் இவற்றில் வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அதே குடிகளின் அடிப்படையில் எனக்கு இந்த கல்வி , வேலைவாய்ப்பு , அரசியல் , அதிகாரம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் இட ஒதுக்கீடு. எது உண்மையான சமூக நீதி என்று தெரியவில்லை.

    சமூகத்துக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான நீதி வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள். சமூக நீதியை பேசிய இந்த மாநிலத்தில் இதுவரை எடுக்கவில்லை. சமூக நீதியை பேசாத பீகார் மாநிலத்தில் எடுத்து வருகிறார்கள்.

    மொழிவாரியாகவும் கணக்கெடுப்பு எடுங்க. இந்தியாவில் எல்லா பகுதியிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். திருவள்ளுவர் பிறந்த தினத்திற்கு விடுமுறை இல்லை. தமிழ் புத்தாண்டுக்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை இல்லை.

    இந்த திராவிட ஆட்சி இதையெல்லாம் கேட்டு பெற்று தராமல் என்ன செய்து கொண்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தயவு செய்து சாதி, மத, மொழி அடிப்படையில் கணக்கெடுப்பு எடுங்க'' என கூறினார்.

    ALSO READ | ‘சுதந்திரம் என்பது வரலாறு. வரலாற்றை மறந்து விட்டால் மீண்டும் அடிமைப்பட நேரிடும்’ – கமல்ஹாசன் சுதந்திர தின மெசேஜ்...

    இவ்விதம் அவர் பேசிக்கொண்டிருக்க இடையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றார். 'பெரியார் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்கூடாது என்று கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதலளித்த சீமான், இப்போதும் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா? இல்லையா? நிருபரை நோக்கி இடஒதுக்கீடை நீங்கள் ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு நிருபர் ஒருவர், ஜமீன்தாரர்கள், மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆகியோர்களுக்கு பிசி எம்பிசியில் இடஒதுக்கீடு கொடுக்கும் நிலையில் முற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை என கேட்கிறார்.

    சீமான் நீ தான் பெரிய முன்னேறுன வெங்காயமாச்சே... நீ பிசி எம்பிசிக்கு வா.. நான் இங்கே தான் இருப்பேன்... நான் முற்படுத்தப்பட்ட வகுப்பா தான் இருப்பேன்.. என கூறி முடிப்பதற்குள் நிருபர், அத பத்தி நீங்க பேசவேயில்லைய சார் என கூறுகிறார்.

    இதில் கோபமுற்ற சீமான் யோவ் யார் நீ முதல காதுல பஞ்ச வச்சு படுத்து கிடந்ததுட்டு பேசவில்லை , கீசவில்லைனு கிடக்குற போயா லூசு கேக்கலனா கேக்கலைனு சொல்லு. டே மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல் என்று திட்டியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Seeman

    அடுத்த செய்தி