Home /News /tamil-nadu /

உச்சகட்டத்தை எட்டும் தேர்தல்: தீவிர பிரசாரத்தில் அரசியல் பிரபலங்கள்!

உச்சகட்டத்தை எட்டும் தேர்தல்: தீவிர பிரசாரத்தில் அரசியல் பிரபலங்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

திமுக தலைவர் ஸ்டாலின் வடசென்னை மக்களவை மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

  • News18
  • Last Updated :
    நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் நாடு முழுவதும் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று அரசியல் பிரபலங்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் இன்றும் வேலூர், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.  காலை எட்டரை மணிக்கு வேலூரில் பயணத்தை தொடங்கும் முதலமைச்சர், காலை 9.30 மணிக்கு ஆற்காடு பேருந்து நிலையம் அருகே பரப்புரையில் ஈடுபடுகிறார்.

    தொடர்ந்து சோளிங்கர்,பானாவரம் மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் வேலூர் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார். வேலூர் மாவட்டத்தில் மாலை ஐந்தே கால் மணியளவில் பிரசாரத்தை முடிக்கும் அவர் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் மீஞ்சூரில் இரவு இன்றைய பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மற்றும்  திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு சேகரித்துவிட்டு, செய்யூர் மற்றும் மேல்மருவத்தூரில் பரப்புரை மேற்கொள்கிறார்.

    இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் வடசென்னை மக்களவை மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கோவையில் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் கமல்ஹாசன், இதேபோல் தேனி அமமுக வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வன் மதுரையில் இருந்து தேனிக்கு சென்று பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Election Campaign, Elections 2019, Lok Sabha Election 2019

    அடுத்த செய்தி