5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டுவருகிறது!

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டுவருகிறது!
குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய செவிலியர்
  • News18
  • Last Updated: January 19, 2020, 12:33 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டுவருகிறது.

நாடு முழுவதும் இளம்பிள்ளை வாதம் எனப்படும் அபாயகரமான போலியோ நோயை ஒழிப்பதற்காக 1995-ம் ஆண்டு முதல் ஜனவரி, மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் இந்தியாவில் 2014ம் ஆண்டிலேயே போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இருந்தபோதும் அண்டை நாடுகளில் போலியோ தாக்கம் இருப்பதால் போலியோ நோய்க்கிருமி பரவும் அபாயம் உள்ளது.

இதன்காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன்படி, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.


நாடு முழுவதும் 17 கோடியே 40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 71 லட்சம் குழந்தைகளுக்கும், சென்னையில் 7 லட்சம் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள், சத்துணவு மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சுற்றுலா தளங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 43 ஆயிரத்து 51 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து விரைவில் வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கினார். இதேபோல, பிற மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சொட்டு மருந்து வழங்கினர்.
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்