ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொள்கை ரீதியாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொள்கை ரீதியாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அரசியல், கொள்கை ரீதியாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் வேறுபாடு உள்ளது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ``இலங்கை போரின்போது மத்தியில் இருந்த காங்கிரஸ், மாநிலத்தில் இருந்த திமுக அரசுகள் எடுத்த தவறான நிலைப்பாட்டின் காரணமாக அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை பேரின்போது யார் உதவி செய்தார்கள்? என்பதை அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் நடைபெற்ற விழாவொன்றில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பான உண்மைகளை தமிழக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில்தான் அதிமுக சார்பில்  பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாட்டை மோடிதான் காப்பாற்ற முடியும் என்று பிரசாரம் செய்தார். ஆனால் ஜெயலலிதாவோ இந்த லேடி வேண்டுமா? அல்லது மோடி வேண்டுமா? என்று பிரசாரம் செய்து 37 இடங்களில் அதிமுகவை வெற்றி பெறச் செய்தார். மேலும், மத்தியில் பாஜக அரசு அமைவதற்கு எந்த விதத்திலும் அவர் அனுசரணையாக இருக்கவில்லை.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி அடைய முடியும். எனவே தான் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு உள்ளது. கொள்கை அளவில் நாங்கள் விட்டு தர மாட்டோம். இதில் சமரசம் என்பதற்கே இடம் கிடையாது’’ என்றார் கடம்பூர் ராஜூ.

First published:

Tags: ADMK, Admk protest, BJP, Minister kadambur raju