கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட காவலர் அன்பரசன்

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் காவலர் அன்பரசன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 • Share this:
  கிருஷ்ணகிரி ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். விளையாட்டு வீரரான இவர் கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். சேலத்தில் பணியாற்றி வந்த அன்பரசன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று கிருஷ்ணகிரி வந்துள்ளார்.

  கடந்த 4 மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு துப்பாக்கி ஏந்திய காவலராக பணியாற்றி வந்த அன்பரசன் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார். இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் தேடிவந்துள்ளனர்.

  நீதிமன்ற பணியாளர்கள் இன்று காலை முதல் தளத்திற்கு செல்லும் வழியில் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் அன்பரசன் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். விசாரணையில் அன்பரசன்(29) கிருஷ்ணகிரி பூந்தோட்டம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் என்பதும் சமீபத்தில் திருமணமாகி அவரது மனைவி 3 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

  இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தனது குடும்பத்தில் தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
   
  Published by:Vijay R
  First published: