ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய மதுரைக்கு விரைந்த தனிப்படை

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய மதுரைக்கு விரைந்த தனிப்படை

சாந்தினி

சாந்தினி

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே இந்த வழக்கு குறித்து ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய மதுரைக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

  முன் ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யபட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே இந்த வழக்கு குறித்து ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

  இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டன் திருமணமானவர் என தெரிந்துதான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளதாக தெரிவித்தார். நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை எனவும் கூறினார். மேலும், அறிமுகமான 3 மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக காவல்துறை தெரிவிப்பது தவறானது எனவும் வழக்கறிஞர் வாதிட்டார்.

  Read More : யூடியூபர் மதன்... உல்லாச வாழ்க்கை... தம்பதியாக சேர்ந்து மோசடியில் ஈடுப்பட்ட பகீர் பின்னணி

  அத்துடன், தான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் தன்னை காவல்துறையினர் கைது செய்யட்டும் என தெரிவித்த மணிகண்டன் தரப்பு, ஏப்ரல் 15ஆம் தேதி வரை தன்னுடன் சாந்தினி வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறப்பட்டது. காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

  இந்நிலையில், காவல்துறை தரப்பில், விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று முறை சாந்தினி கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் முக்கிய சாட்சிகளை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமின் வழங்ககூடாது என வாதிடப்பட்டது. மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

  Must Read : அன்று மு.கருணாநிதி இன்று மு.க.ஸ்டாலின் : முதலமைச்சரின் டெல்லி பயண சுவாரஸ்யங்கள்!

  நடிகை சாந்தினி தரப்பிலும் வழக்கறிஞர் முன் ஜாமின் வழங்க கூடாது என வாதிடப்படடது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய அடையாறு மகளிர் காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். இந்நிலையில், மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய மதுரைக்கு தனிப்படை காவலர்கள் விரைந்துள்ளனர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள்