Home /News /tamil-nadu /

Breaking: பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேனியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு!

Breaking: பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேனியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு!

Breaking News

Breaking News

வேலூர் மாவட்டத்தில் தி.மு.க பிரமுகர் வீட்டில் 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, அந்தத் தொகுதி மக்களவைத் தேர்தல் மட்டும் ரத்து செய்வதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தி.மு.க பிரமுகர் வீட்டில் 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, அந்தத் தொகுதி மக்களவைத் தேர்தல் மட்டும் ரத்து செய்வதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தி.மு.க வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமானத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை செய்ய சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களை அங்கிருந்தவர்கள் தள்ளியதாக கூறப்படுகிறது. எனவே, காவல்துறையினர் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, Police, Tamil Nadu Lok Sabha Elections 2019, Theni S22p33

அடுத்த செய்தி