தூங்கவிடாமல் காவல்துறை சித்ரவதை செய்தனர்: முகிலன் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மற்றொரு சி.டி. தங்களிடம் இருப்பதாகவும், அதனை கைப்பற்றுவதற்காகவே முகிலன் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 10, 2019, 9:56 AM IST
தூங்கவிடாமல் காவல்துறை சித்ரவதை செய்தனர்: முகிலன் குற்றச்சாட்டு!
சமூக செயற்பாட்டாளர் முகிலன்
Web Desk | news18
Updated: July 10, 2019, 9:56 AM IST
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  சமூக செயற்பாட்டாளர் முகிலனை,  15 நாட்கள் காவலில் வைக்க கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்தநிலையில். விசாரணைக்கு பின் வெளியே வந்த முகிலன், தன்னை காவல்துறை தூங்கவிடாமல் சித்ரவதை செய்வதாக குற்றம்சாட்டினார்.

முகிலனுடன் பல்வேறு போராட்டக்களங்களில் கலந்துகொண்ட பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் முகிலன் கைதாகியுள்ளார்.  நேற்று நள்ளிரவில்  கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணைக்கு பின்னர்,  வருகிற 24-ம் தேதி வரை, முகிலனை 15 நாட்களுக்கு  திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதனைதொடர்ந்து வெளியே வந்த அவர், தன்னை கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும், 4 நாட்களாக காவலர்கள் தூங்கவிடாமல் சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும் ஸ்டெர்லைட் உண்மைகளை வெளிவர விடாமல் காவல்துறை தடுப்பதாக குற்றம்சாட்டினார்.

முகிலனிடம் நெருங்க விடாமல் செய்தியாளர்களுக்கு தடுப்பு

விசாரணைக்கு முன்னதாக, முகிலனை பேட்டி எடுக்க வந்த செய்தியாளர்களை 100 மீட்டர் முன்னதாகவே, தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் - செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக,  முகிலன் மனைவி பூங்கொடி மற்றும் சமூக ஆர்வலர்கள் முகிலனை மீட்க பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய மேலும் ஒரு சி.டி. உள்ளது

செய்தியாளர்களிடம் பேசிய முகிலனின் மனைவி பூங்கொடி, தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையும் திட்டமிட்டு பழிவாங்குவதாக குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மற்றொரு சி.டி. தங்களிடம் இருப்பதாகவும், அதனை கைப்பற்றுவதற்காகவே முகிலன் கடத்தப்பட்டதாகவும் கூறினார். அந்த ஆதாரம் வெளியானால் அரசுக்கு பிரச்னை வரும் எனவும் முகிலனின் மனைவி தெரிவித்தார்.

மேலும் படிக்க... தர்காவில் தலைவிரிகோலத்தில் நிர்மலாதேவி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...