பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை நகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ரயில் பெட்டிகளிலும், பார்சல்கள் கொண்டு செல்லும் பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
Also read: விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன - பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
மெட்டல் டிடெக்டர் உதவியுடனும், மோப்ப நாய்கள் உதவியுடனும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை நகரில் 1,000 போலீசாரும், கோவை புறநகர் பகுதியில் 1,200 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்