அனுமதியின்றி யாத்திரை.. கருணாஸ் வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசார்

அனுமதியின்றி யாத்திரை.. கருணாஸ் வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசார்

போலீசாருடன் வாக்குவாதம் செய்த கருணாஸ்

தேசிய தேய்வீக யாத்திரை செல்ல அனுமதியில்லை என்றும் அதனால் திரும்பி சென்னைக்கு செல்ல வேண்டும் என்றும் போலீசார், கருணாசிடம் வலியுறுத்தினர்.

 • Last Updated :
 • Share this:
  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. யாத்திரை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாய மக்களையும் முதலமைச்சர் அவமானப்படுத்தி விட்டதாக கருணாஸ் குற்றச்சாட்டி உள்ளார்.

  மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும், பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையாரை தேவரினம் என்று மறைந்த முதலமைச்சர் அம்மா அறிவித்து வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேசிய தெய்வீக யாத்திரை நேற்று தொடங்கியது. முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தலைமையில் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு வாகனங்களில் பசும்போன் தேவர் நினைவிடம் நோக்கி சென்றனர்.

  இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கருணாஸ் தலைமையில் சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தேசிய தேய்வீக யாத்திரை செல்ல அனுமதியில்லை என்றும் அதனால் திரும்பி சென்னைக்கு செல்ல வேண்டும் என்றும் போலீசார், கருணாசிடம் வலியுறுத்தினர். இதனால் போலீசாருடன், கருணாஸ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  பாஜக சென்ற வேல் யாத்திரைக்கும், பாமக நடத்தி வரும் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு எல்லாம் அனுமதி வழங்கும் இந்த அரசு, முக்குலத்தோர் சமுதாய மக்களின் கோரிக்கைகளுக்காக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் நடைப்பெறும் யாத்திரையை தடுத்து நிறுத்துவது நியாயமா என்றும் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாய மக்களையும், பசும்பொன் தேவரையும் முதலமைச்சர் அவமானப்படுத்திவிட்டதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: