• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • FACT CHECK: சைக்கிளில் சென்ற மாணவனிடம் ஹெல்மெட் கேட்டாரா போலீஸ்...? உண்மையில் நடந்தது என்ன?

FACT CHECK: சைக்கிளில் சென்ற மாணவனிடம் ஹெல்மெட் கேட்டாரா போலீஸ்...? உண்மையில் நடந்தது என்ன?

சைக்கிளுடன் பள்ளி மாணவரை பிடித்த போலீஸ்

சைக்கிளுடன் பள்ளி மாணவரை பிடித்த போலீஸ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஹெல்மெட் அணியாதததால் மாணவரின் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை அடுத்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் காவல்துறையினரும் வாகன ஓட்டிகளை தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது சைக்கிளில் வந்த பள்ளி மாணவர் ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரித்த வீடியோ இணையத்தில் வெளியாகியது.

    மேலும் அந்த மாணவரிடம் ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் செலுத்தச் சொன்னதாகவும் செய்திகள் வெளியாகின.

    இதுகுறித்து விளக்கமளித்த போலீசார், மாணவர் சைக்கிள் ஹேன்ட் பாரை பிடிக்காமல் இரு கைகளையும் விட்டு விட்டு வேகமாக சைக்கிள் ஓட்டியதால் அவரை எச்சரிக்கும் விதத்தில் பிடித்து வைத்ததாக கூறியுள்ளனர். சைக்கிளுடன் பள்ளி மாணவரை பிடித்து 1 மணி நேரம் காத்திருக்க வைத்த போலீசார் பின்னர் மாணவரை எச்சரித்து அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

    Video:



     




    View this post on Instagram





     

    A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu) on






    வீடியோ பார்க்க: கோவிலில் பூஜை செய்யும் திருநங்கை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: