தமிழகத்தில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர் காவலர் விஜயகுமார். இவர் நேற்று குடிபோதையில் இருந்த போது வீட்டில் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக காவலர் விஜயகுமார் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ள நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். காயம்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.
Also Read : செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு.. 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' - சசிகலா சூசகம்
குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதை விட கொடுமையான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. இது முதலும் இல்லை.. கடைசியும் இல்லை. ஒவ்வொரு நாளும், அரசே விற்கும் மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன; ஏராளமான இளம்பெண்கள் கைம்பெண்களாக்கப்படுகின்றனர்; குழந்தைகள் ஆதரவற்றவர்களாகின்றனர்.
இத்தகைய நிலை இனியும் தொடர்வதை அரசு அனுமதிக்கக்கூடாது. அரசின் கஜானாக்கள் ’தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்’களால் நிரப்பப்படக்கூடாது. அதனால், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.