தமிழகத்தில் ஆப
ரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்ததாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2,423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ததாக 6,319 பேர் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மூன்று கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள், கஞ்சா விற்பனை மூலம் வாங்கிய ஆறு வீட்டுமனை நிலங்கள், சொத்துக்கள் உள்ளிட்டவைகளும் காவல்துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 7 கஞ்சா வியாபாரிகளிடமிருந்து 29 வங்கி கணக்குகளும், தேனி மாவட்டத்தில் 6 கஞ்சா வியாபாரிகளிடமிருந்து 8 வங்கி கணக்குகளும், நிலங்களும் முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் 963 கிலோ கஞ்சாவும், ரயில்வே போலீசார் 734 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரும் போது திருவள்ளூர் மாவட்டத்தில் 208 கிலோ கஞ்சாவும், சென்னையில் 186 கிலோவும் கடந்த ஒரு மாதத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு குட்கா போதை பொருளை கடத்தி வரும் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.