ரஜினிகாந்த் வீட்டுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்..!

நடிகர் ரஜினிகாந்த்

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு இன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதால் பெரியார் அமைப்புகள் ரஜினி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இல்லம் அமைந்து இருக்கக்கூடிய போயஸ் கார்டன் பகுதியில் அவருடைய இல்லம் அருகே சுழற்சி முறையில் 10 ஆயுதப்படை போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த்  தன் இல்லத்திற்கு வழங்கப்பட்ட வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ள போலீசாரிடம் கோரிக்கை வைத்தார்.குறிப்பாக நேற்று காலை 11 மணி அளவில் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்பொழுது தனக்கென்று வழங்கப்பட்டு வரக்கூடிய பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று இரவு வரை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
Published by:Sankar
First published: