பழைய நண்பர் என கூறி பேஸ்புக் மூலம் பணம் மோசடி... ஃபேக் ஐடி நபரை தேடுகிறது போலீஸ்

மதுரையில் பழைய நண்பர் என கூறி போலியான பேஸ்புக் ஐடி மூலம் 2,70,000 ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீஸ் தேடிவருகின்றனர்.

பழைய நண்பர் என கூறி பேஸ்புக் மூலம் பணம் மோசடி... ஃபேக் ஐடி நபரை தேடுகிறது போலீஸ்
கோப்புப் படம்
  • Share this:
மதுரை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஜெயக்குமார் ராமசாமி என்ற பெயரில் அறிமுகமான மர்மநபர் ஒருவர் தன்னை பழைய நண்பர் என கூறி பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அவர்கள் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் குடும்பத்தினர் கஷ்டத்தில் இருப்பதாக கூறி முதல்கட்டமாக 3500 ரூபாய் பணம் போடும்படி கூறியுள்ளார்,

அதனை நம்பி கூகுள் பே மூலம் ஜெயக்குமார் கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார் சீனிவாசன். தொடர்ந்து ஒரு மாதத்தில் அடுத்தடுத்து பல காரணங்களை கூறி நெருங்கிய நண்பன் என்ற பெயரில் சீனிவாசனிடம் இருந்து மர்ம நபர் சுமார் 2,70,000 ரூபாய் அளவிற்கு பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளார்,


இந்தநிலையில் சந்தேகமடைந்த சீனிவாசன்
மற்ற நண்பர் முலம் விசாரித்த போது தனது நண்பன் பெயரில் போலியான பேஸ்புக் ஐடி மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சீனிவாசன் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.Also read... கொரோனா தடுப்பு பணி - பிரதமர் மோடிக்கு எவ்வளவு மதிப்பெண்...? எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையாவது இடம்?


Also see...
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading