சிறுமியை முட்புதருக்குள் தூக்கிச்சென்ற வடமாநில இளைஞர்... சத்தம் கேட்டு மீட்ட அக்கம் பக்கத்தினர்!

சிறுமியை முட்புதருக்குள் தூக்கிச்சென்ற வடமாநில இளைஞர்... சத்தம் கேட்டு மீட்ட அக்கம் பக்கத்தினர்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 12, 2020, 11:48 AM IST
  • Share this:
செங்கல்பட்டு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை, முட்புதருக்குள் தூக்கிச்சென்ற வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

முள்ளிப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே அடுக்குமாடி குடியிருப்பு பணி நடந்து வருகிறது. அங்கு இருநூறுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வழியே நடந்து சென்ற 10ம் வகுப்பு மாணவியை, ராமு என்ற வடமாநில இளைஞர் முட்புதருக்குள் தூக்கிச்சென்றுள்ளார். சிறுமி சத்தமிடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு சிறுமியை மீட்டனர்.


ஆத்திரமடைந்த மக்கள் சம்பந்தப்பட்ட இளைஞரை தேட, அப்போது வடமாநில இளைஞர்கள் ஓடி ஒளிய, கட்டுமான தொழிலாளர் குடியிருப்புகளை மக்கள் அடித்து நொறுக்கினர்.

ராமுவோடு மேலும் 2 பேரும் தலைமறைவாகி விட்ட நிலையில், அவர்களுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ராமுவின் குழுவில் வேலை பார்த்த 13 பேரை அழைத்துச்சென்று செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also see...
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்