Home /News /tamil-nadu /

தனிப்பட்ட வங்கிக் கணக்கில் கார்த்திக் கோபிநாத் ரூ. 3 லட்ச ரூபாய் வசூல்- உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

தனிப்பட்ட வங்கிக் கணக்கில் கார்த்திக் கோபிநாத் ரூ. 3 லட்ச ரூபாய் வசூல்- உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

கார்த்திக் கோபிநாத்

கார்த்திக் கோபிநாத்

கார்த்திக் கோபிநாத் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 3 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கோவில் திருப்பணி என்ற பெயரில் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும்,  யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் ஆகியோர்  ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில்  கடந்த மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்க்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில் காவல் விசாரணைக்கு அனுமதி மறுத்த பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறையும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பூந்தமல்லி நீதிமன்றம் ஏற்கனவே கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கியதால் அவரை காவலில் எடுக்க அனுமதி கேட்டு காவல்துறை தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பின்னர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், மிலாப் கணக்கு அல்லாமல் தனது தனிப்பட்ட வங்கி கணக்கின் மூலம் கோவில் திருப்பணி என்ற பெயரில் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் கார்த்திக் கோபிநாத் வசூலித்ததாக தெரிவித்தார்.

150 சவரன் நகை, ரூ.9 லட்ச ரோலக்ஸ் வாட்ச்சை சீர்வரிசையாக வாங்கி ஏமாற்றும் நபர்- காவல்துறையில் இரண்டு மனைவிகள் புகார்

கார்த்திக் கோபிநாத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, கடந்த முறை 28 லட்ச ரூபாய் என்று தெரிவித்து விட்டு தற்போது 3 லட்ச ரூபாய் என காவல்துறை குறிப்பிடுவதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கார்த்திக் கோபிநாத்தின்  வங்கிக் கணக்கு விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Karthik

அடுத்த செய்தி