காஞ்சிபுரம் கலெக்டருக்கு எதிராக போலீசார் அடுத்ததாக வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ!

கலெக்டர் பொன்னையாவுக்கு ஏற்கனவே இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: August 15, 2019, 11:27 AM IST
காஞ்சிபுரம் கலெக்டருக்கு எதிராக போலீசார் அடுத்ததாக வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ!
காஞ்சிபுரம் ஆட்சியர்
news18
Updated: August 15, 2019, 11:27 AM IST
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை, கலெக்டர் ஒருமையில் திட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே போலீசார் ஒரு வீடியோ வெளியிட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை பரவ விட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக இருந்த காவல் ஆய்வாளர், விஐபி வரிசையில் பொதுமக்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, காவலரை ஒருமையில் திட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கடுமையான வார்த்தைகளுடன் அவர் போலீசை திட்டும் வீடியோ வைரலாக பரவியது.
Loading...ஒரு அரசு உயர் அதிகாரி போலீசாரை இப்படி அனைவரும் பார்க்கும் விதத்தில் தரம் குறைந்த வார்த்தைகளால் திட்டுவது ஏற்புடையதா? என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்க்கு தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன் கலெக்டர் பொன்னையா மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இதற்கிடையே, அத்திவரதர் வைபவத்தில் தாங்கள் படும் அல்லல்கள், பணிச்சுமைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் போலீசார் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.அதற்கு அடுத்ததாக, உரிய பாஸ் இல்லாமல் விஐபி தரிசன வழியில் கலெக்டர் பொன்னையா அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் வீடியோவை போலீசார் சிலர் சமூக வலைதளத்தில் பரவ விட்டனர்.இந்நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தான் லைசென்ஸ் போட்டு அனுப்பின ஆளை இன்ஸ்பெக்டர் கையபுடிச்சு தள்ளினார் என்று கலெக்டர் ஆவேசமாக ஒருமையில் கூறியது பதிவாகியுள்ளது.கலெக்டர் பொன்னையாவுக்கு ஏற்கனவே இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also See....

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...