பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவி தரையில் அமர வைக்கப்பட்ட அவலம்
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவி தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், துணைத் தலைவர் மோகன் ராஜன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெற்குதிட்டை பகுதியில் ஆட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி
- News18
- Last Updated: October 10, 2020, 2:20 PM IST
கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ராஜேஸ்வரியை மற்ற உறுப்பினர்கள் மதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் உச்சமாக, ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது பிற உறுப்பினர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் சுதந்திர தினத்தன்று அவருக்கு தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜன் ஆகியோர் தேசியக் கொடியேற்றியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி ஆதிதிராவிடர் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகம் கூட்டங்களில் கீழே அமர வைத்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
Also read... 55 நாட்கள் நடுக்கடலில் தத்தளிப்பு: வீடு திரும்பிய காசிமேடு மீனவர்களின் நடுங்கவைக்கும் அனுபவம்அப்போது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவியை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாற்காலியில் அமரவைத்து மற்ற 4 வார்டு உறுப்பினர்களை எதிரே அமர வைத்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மோகன் ராஜன் மற்றும் 4வது வார்டு உறுப்பினர் ராஜதுரை உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை குறிப்பிடத்தக்கது.