ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 6 பெண்கள் மீட்பு!

தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 6 பெண்கள் மீட்பு!

சித்தரிப்புப் படம்

சித்தரிப்புப் படம்

அடைத்து வைத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை விடுவதற்கு ரூ. 50,000 கேட்டு மிரட்டியவர்கள் கைது

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தனியார் விடுதியில் பல நாட்களாக அடைத்து க்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்ளிட் 6 பேரை காவல்துறையினர் மீட்டனர். 

  கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்துறை அருகே பூச்சிக்காட்டை சேர்ந்த காசிலிங்கம் என்பவரது மனைவி சுமதி. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியில் சென்ற சுமதி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

  இந்நிலையில் சுமதியை காவல் கிணறு அருகே பார்த்ததாக உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பார்த்த போது தனியார் விடுதி ஒன்றில் சுமதி மற்றும் 6 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை அடைத்து வைத்தி்ருந்த சண்முகம் என்பவர் சுமதியை விடவேண்டும் என்றால் ரூ.50,000 பணம் தரவேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது.

  இதையடுத்து பணகுடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற காவல்துறையினர் சுமதி மற்றும் ஆறு பேரை மீட்டனர். இதையடுத்து கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சண்முகம் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

  Published by:Saroja
  First published:

  Tags: 6 women rescued, Nellai, Panagudi village, Police Rescued, Thirunelveli