டிஜிபி நியமனத்துக்கான காலவரம்பை மாற்றியது உச்சநீதிமன்றம்!

பணிநிறைவு காலம் 2 ஆண்டுகள் இருப்பவர்களையே டிஜிபி-யாக நியமிக்க முடியும் என்று கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

டிஜிபி நியமனத்துக்கான காலவரம்பை மாற்றியது உச்சநீதிமன்றம்!
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: March 13, 2019, 12:46 PM IST
  • Share this:
ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலம் உள்ளவர்களை டிஜிபியாக நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிபிக்களின் நியமனம் தொடர்பான வழக்கில், பணிநிறைவு காலம் 2 ஆண்டுகள் இருப்பவர்களையே டிஜிபி-யாக நியமிக்க முடியும் என்று கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து தமிழகம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்கள் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன.


இந்த நிலையில், சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதங்களாக குறைத்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் இருப்பவர்களை டிஜிபி-யாக நியமிக்கலாம். மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே டிஜிபிக்களை நியமிக்க முடியும் எனவும், மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see... பொள்ளாச்சி பாலியல் கொடூரக் குற்றவாளிகளை அடித்து உதைத்த பெண்ணின் உறவினர்கள் 
First published: March 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading