ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பைக்கில் ட்ரிபிள்ஸ் போனால் போலீஸ் கண்டுகொள்வதில்லை: உயர்நீதிமன்றம் கண்டனம்

பைக்கில் ட்ரிபிள்ஸ் போனால் போலீஸ் கண்டுகொள்வதில்லை: உயர்நீதிமன்றம் கண்டனம்

பைக்கில் மூவர் பயணம்

பைக்கில் மூவர் பயணம்

  • 1 minute read
  • Last Updated :

இருசக்கர வாகனத்தில் மூவர் பயணப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நண்பர்கள் 4 பேர் சேர்ந்து மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மீது பைக் மோதியதில் கணேசன், ரகு ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, தங்களுக்கு வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி இருவரும் சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்றம் கணேசனுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், ரகுவுக்கு 87 ஆயிரத்து 750 ரூபாய் இழப்பீடும் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு கடந்த 2013ல் உத்தரவிட்டது.

இந்த இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரி கணேசன், ரகு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மனுதாரர்கள் உள்ளிட்ட நான்கு பேர் ஒரே பைக்கில் செல்லும்போது, பைக்கை ஓட்டுபவருக்கு கைப்பிடியை இயக்க சிரமம் ஏற்படும் என்பதாலும், நிலைதடுமாறும் சூழல் ஏற்படும் என்பதாலும் இந்த விபத்தில் அவர்களுக்கும் சமமான பங்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டே தீர்ப்பாயம் இழப்பீடு நிர்ணயித்துள்ளதாக கூறி, மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் உத்தரவில், இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் பயணம் செய்வது விதிகளுக்கு முரணானது என்றாலும், இருவருக்கு மேல் பயணம் செய்பவர்களை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

.

Also Watch:

Published by:Yuvaraj V
First published:

Tags: Traffic Rules