• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குரங்கணியில் டிரெக்கிங் - வன அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பிய இஸ்ரேல் நாட்டினர்!

குரங்கணியில் டிரெக்கிங் - வன அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பிய இஸ்ரேல் நாட்டினர்!

காட்டுத் தீ (கோப்புப்படம்)

காட்டுத் தீ (கோப்புப்படம்)

தேனி மாவட்டம் குரங்கணியில் மார்ச் மாதம் காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற 23 பேர் பலியான நிலையில், அங்கு டிரெக்கிங் செய்ய தடை விதிக்கப்பட்டது.

  • Share this:
தேனி மாவட்டம் குரங்கணியில் அனுமதி இல்லாமல் டிரெக்கிங் செய்ததாக சந்தேகத்தில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 6 பேரை வனத்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அதிகாரிகளை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அங்கு டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டது.

மூணாறு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது வழிகாட்டுதலின் பேரில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர், (மூன்று ஆண்கள், மூன்று பெண்கள்) கடந்த ஒருவாரமாக கேரள பகுதிகளில் சுற்றுலா சென்றுவிட்டு, டாப்ஸ்டேஷன் வழியாக குரங்கணி வந்துள்ளனர்.

இந்தத் தகவல், போடி வனத்துறையினருக்கு தெரிய வந்த பின்னர் உடனே விரைந்து சென்று, வழிகாட்டி ரவி உட்பட ஆறு பேரை பிடித்து, வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துவந்துள்ளனர். குரங்கணி காட்டுத்தீ சம்பவத்திற்குப் பிறகு அந்த வனப்பகுதியில் டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், இவ்வழியாக ஏன் வந்தீர்கள்? என அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு சரிவர பதிலளிக்காததால், அவர்களுடைய பாஸ்போர்ட்டை காட்டும்படி வனத்துறையினர் கோரியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ஆறு வெளிநாட்டவர்களும், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் அதிகாரிகளை தள்ளிவிட்டு வனச்சரக அலுவலகத்தில் இருந்து அவர்கள் தப்பித்துச் சென்றனர். யார் இவர்கள்? ஏன் அவர்களைப் பற்றிய தகவல்களை தர மறுக்கிறார்கள்? எதற்காக தப்பித்தார்கள்? என்று புரியாத வனத்துறையினர், போடி நகர் காவல்துறைக்கு தகவல் தரவே, தப்பியோடிய ஆறு பேரை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: