தமிழக காவல்துறையில் இருவருக்கு குடியரசுத்தலைவர் பதக்கம்... 21 பேருக்கு மெச்சத்தக்க சேவைக்கான பதக்கம்...!

President Metal For Police | ஒட்டுமொத்தமாக 677 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

news18
Updated: August 14, 2019, 2:19 PM IST
தமிழக காவல்துறையில் இருவருக்கு குடியரசுத்தலைவர் பதக்கம்... 21 பேருக்கு மெச்சத்தக்க சேவைக்கான பதக்கம்...!
கோப்புப்படம்
news18
Updated: August 14, 2019, 2:19 PM IST
தமிழக காவல்துறையில் பணியாற்றும் 2 அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் போலீஸ் பதக்கமும், 21 அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க சேவைக்கான போலீஸ் பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில காவல்துறை, துணை ராணுவப்படை, விசாரணை அமைப்புகள், புலனாய்வு முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக 677 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலம் வாரியாக பதக்கம் பெற்றவர்கள் எண்ணிக்கை


ஆவின் நிறுவனத்தில் விஜிலன்ஸ் ஏ.டி.ஜி.பியாக பணியாற்றும், ஷங்கர் லால் மற்றும் கோவை காவலர் பயிற்சிப்பள்ளியில் எஸ்.ஐ.யாக பணியாற்றும் சபரிநாதன் ஆகியோருக்கு மெச்சத்தக்க பணிக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது.

போலீஸ் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 21 தமிழக அதிகாரிகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...