பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய் : மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டதா?

தெருநாய் - மாதிரிப்படம்

குழந்தையின் தலை தனியாக, அறுக்கப்பட்ட நிலையில் ரத்தம் உரைந்து சாக்கடை நீரில் நனைந்தது போன்று இருந்தது.

 • Share this:
  மதுரை பீ.பீ்குளம் பகுதியில் பச்சிளங் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை நாய் தூக்கி வந்த விவகாரத்தில், குழந்தை நரபலிக்காக கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மதுரை பீ.பீ்குளம் வருமானவரித்துறை அலுவலகத்தின் எதிரில் நேற்று மதியம் நாய் ஒன்று பச்சிளங்குழந்தை ஒன்றின் தலையை வாயில் கவ்வியபடி வந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர் அதனை பார்த்தவுடன் நாயை விரட்டியதால் நாய் குழந்தையின் தலையை போட்டுவிட்டு ஓடிவிட்டது.

  இது குறித்து, அந்த இளைஞர் உடனடியாக தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

  நாய் தூக்கிவந்த குழந்தையின் தலை தனியாக, அறுக்கப்பட்ட நிலையில் ரத்தம் உரைந்து சாக்கடை நீரில் நனைந்தது போன்று இருந்ததால் சந்தேகம் மரணம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குழந்தையின் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை நடத்திவருகின்றனர்.

  Must Read : அப்பாவி பெண்களை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்திய ஐந்து பேர் கைது

  அதன்படி, பீ.பீ.குளம், நரிமேடு, தபால்தந்தி நகர் , கிருஷ்ணாபுரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிறந்த குழந்தைகள் குறித்த விவரங்களும் மதுரை மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: