• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • YouTube Madan : யூடியூபர் மதனின் வங்கி கணக்குகள், முதலீடுகளை ஆய்வு செய்யும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

YouTube Madan : யூடியூபர் மதனின் வங்கி கணக்குகள், முதலீடுகளை ஆய்வு செய்யும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

 யூடியூபர் மதன்

யூடியூபர் மதன்

யூடியூபர் மதனோடு ஆன்லைனில் விளையாடும் நபர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்கள் மகன் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

  • Share this:
    யூடியூபர் பப்ஜி மதனின் வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்து ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

    யூடியூபர் பப்ஜி மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்தில், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரென்ஸி முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    யூடியூபர் மதனோடு ஆன்லைனில் விளையாடும் நபர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்கள் மகன் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், மதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சேகரித்து வருகிறது.

    மதனுடன் இணைந்து, அவருடைய மனைவி கீர்த்திகாவும் ஆபாச பேசிய வீடியோ பதவிட்டுள்ளதால், மனைவி கீர்த்திகாவை கைது செய்துள்ளனர். மேலும் மதனின் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் காவல்துறையினர் கடிதம் எழுதி உள்ளனர்.

    மதனின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், மதனின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இரண்டாவது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், மதன் சரணடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள போதிலும்,நேற்று வரை தனது யூடியுப் சேனல்களில் பெண்களுடன் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார் மதன்.

    பப்ஜி விளையாட்டு மூலமாக சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், சிறுவர், சிறுமியரை மிரட்டி பணம் பறித்ததாகவும் யூடியூபர் மதன் மீது 159 புகார்கள் இதுவரை வந்துள்ளன. மதன் தரப்பில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    Must Read : பெற்ற தாயையே கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட ஸ்பெயின் இளைஞருக்கு 15 ஆண்டு சிறை

    இந்நிலையில், மதன் ஆபாச வீடியோ மூலம் மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பப்ஜி வீடியோ வெளியிட்டு சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார் மற்றும் 2 சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார் மதன். சென்னை பெருங்களத்தூரில் அருகே அருகே இரண்டு சொகுசு வீடுகளை கட்டியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: