• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை நகைக்கடையில் இருந்து 14 கிலோ தங்கம் மாயம் - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை!

சென்னை நகைக்கடையில் இருந்து 14 கிலோ தங்கம் மாயம் - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை!

நகைக்கடை

நகைக்கடை

சென்னையில் நகைக்கடையில் இருந்து சுமார் 7.5 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கம் மாயமானதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலை வீரப்பன் தெருவில் உள்ள சங்கம் கிராஃப்ட் என்ற தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையை கடந்த 20 ஆண்டுகளாக கடையின் உரிமையாளர் ராஜ்குமார், சுபாஷ் போத்ரா ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.

இவர்கள் தங்க நகைகளை டிசைன் செய்து சிறு வியபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வார நாட்களான செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டி அவற்றை மீண்டும் லாக்கரில் வைப்பது வழக்கம்.

Also read... ’கருப்பர் கூட்டம்’ சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிராக மனைவி மனு - காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அதே போல கடந்த வெள்ளிகிழமை வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டிவிட்டு 14 கிலோ எடையுள்ள தங்க நகைகளை லாக்கரில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டுவதற்காக லாக்கரை திறந்த பொழுது உள்ளே நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



இது தொடர்பாக கடையின் உரிமையாளர் ராஜ்குமார், சுபாஷ் போத்ரா ஆகியோர் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக காவல் இணை ஆணையர் (வடக்கு) பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

கடையின் கதவுகள் மற்றும் லாக்கரின் கதவுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. மர்ம நபர்கள் போலியான சாவியை பயன்படுத்தி லாக்கரை திறந்து நகையை திருடினரா? அல்லது நகைக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் திருடினார்களா? என்ற கோணங்களில் யானைக்கவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: