சென்னையில் நடைபெற்ற ரூ.2 கோடி நகை திருட்டு - செல்போன் டவரை அழைப்புகளைவைத்து விசாரிக்கும் காவல்துறை

சென்னை தியாகராயநகரில் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், டவரில் பதிவான செல்போன் அழைப்புகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற ரூ.2 கோடி நகை திருட்டு - செல்போன் டவரை அழைப்புகளைவைத்து விசாரிக்கும் காவல்துறை
மாதிரிப் படம்
  • Share this:
சென்னை தியாகராய நகர், மூசா தெருவில் உள்ள உத்தம் என்ற மொத்த நகை விற்பனை நிறுவனத்தை, 3 பங்குதாரர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு, இங்கிருந்து மொத்த விற்பனை நடைபெற்றுள்ளது. வெளிநாடுகளுக்கும் தங்க நகைகளை ஏற்றுமதி செய்துள்ளனர். இந்நிலையில்,  கடந்த 20-ம் தேதி இரவு இந்த நிறுவனத்தின் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று, 2 அலமாரிகளில் இருந்த 4.5 கிலோ தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

திருட்டு நடந்த இடத்தில் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியில் ஒருவர் இரவில் திருடிவிட்டு, காலையில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு நபருடன் தப்பிச்சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தெளிவில்லாமல் இருந்தது. இதனால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் நிலவியது. இந்த சூழலில் திருட்டு நடந்தபோது கடையை சுற்றி உள்ள செல்போன் டவர்களில் பதிவான அழைப்புகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தி.நகரில் இருந்து சைதாப்பேட்டை வரை உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் திருடர்கள் தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கேமிரா காட்சிகளிலும் முகம் மற்றும் வாகன பதிவெண் தெளிவாக இல்லை என்பதால் திருடர்களை பிடிப்பதில் சிக்கல் தொடர்கிறது.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading