• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்போரூர் அருகே ராணுவ வெடிபொருள் வெடித்தவிவகாரத்தில் இரும்புக்கடை உரிமையாளரிடம் விசாரணை!

திருப்போரூர் அருகே ராணுவ வெடிபொருள் வெடித்தவிவகாரத்தில் இரும்புக்கடை உரிமையாளரிடம் விசாரணை!

குண்டு வெடிட்த்த இடத்தில் சோதனையிடும் காவல்துறையினர்.

குண்டு வெடிட்த்த இடத்தில் சோதனையிடும் காவல்துறையினர்.

மானாமதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெடிபொருள் வெடித்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ராணுவ வெடிபொருள் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இரும்புக் கடை உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

    மானாமதியில் வெடிபொருள் வெடித்த இடத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஹீம் என்பவர் பழைய இரும்புக்கடை நடத்தி வந்துள்ளார்.

    பின்பு அதே கடையை மற்றொரு இடத்திற்கு மாற்றிவிட்டார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில் இரு ஆண்டுகளுக்கு முன்பு பழைய இரும்பு என நினைத்து வெடிபொருளை வாங்கியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் காவல்துறையினர் அவரை தற்போதைய இரும்புக் கடைக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேறு ஏதேனும் வெடிபொருட்கள் உள்ளதா என மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு நடைபெறுகிறது. மேலும் வெடித்தது ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தும் வெடிபொருள் என்பதால் அதன் பதிவெண்ணை வைத்து அது எங்கு தயாரிக்கப்பட்டது, எந்த ராணுவ மையத்திற்கு அனுப்பப்பட்டது என்றும் விசாரணை நடைபெறுகிறது.

    மானாமதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெடிபொருள் வெடித்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: