ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரவுடி படப்பை குணாவுக்கு உதவி- மூன்று காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்த டி.ஜி.பி

ரவுடி படப்பை குணாவுக்கு உதவி- மூன்று காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்த டி.ஜி.பி

காவல்துறை ஆய்வாளர்கள்

காவல்துறை ஆய்வாளர்கள்

காஞ்சிபுரத்தில் ரவுடி படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. படப்பை குணா தலைமறைவாக இருந்த நிலையில் அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9-ம் தேதி கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இதற்கிடையில், குணாவின் மனைவி எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘தனது கணவரைக் காவல்துறையினர் என்கவுண்டர் செய்யக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் இல்லை. அவர் சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

பிரபல ரவுடி குணா என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி...!

இந்தநிலையில், படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகிய 3 காவல் ஆய்வாளர்கள், பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் டி.ஜி.பி சைலேந்திர பாபு பணியிட மாற்றம் செய்துஉத்தரவிட்டார்.

First published:

Tags: Police