• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கல்லறை தோட்டத்தில் மீட்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல்லறை தோட்டத்தில் மீட்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி இளைஞரை தோளில் சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

  • Share this:
    சென்னை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று கரையை கடந்த நிலையில் சென்னையில் கனமழை பெய்தது. கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களை மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் மயங்கி நிலையில் உதயா என்ற இளைஞர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இறந்துவிட்டார் என்று நினைத்த நிலையில் அவர் உயிருடன் இருந்ததால் உடனடியாக அவரை தோளில் சுமந்து சென்று டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தார்.

    காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. மீட்பு பணியில் பலர் இளைஞரின் உயிரை காக்க தோளில் சுமந்து சென்ற ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்தது. காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி இளைஞரை தோளில் சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    முதல்வர் மு.க.ஸ்டாலினும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் வீரதிர செயலை நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: