புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில் கடத்தி வந்த வழக்கில் காவல் ஆய்வாளர் சுந்தரேசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் உண்ணாமைலை செட்டி சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். அந்த காரில் இருந்தவர் திடீரென இறங்கி தப்பி ஓடிவிட்டார். உஷாரான போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் 168 மதுப்பாட் டில்கள், 30 லிட்டர் சாராயம் இருந்தது.
காரில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி சமுத்திரக்கனி என தெரிய வந்தது.
இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் புதுவையில் இருந்து அவர் அடிக்கடி மதுப்பாட்டில்கள் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவருக்கு கடலூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
எனவே சமுத்திரக்கனி, இன்ஸ்பெக்டர் சுந்த ரேசனிடம் மதுப்பாட்டில்களை கடத்தி சென்று விற்பனை செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி இன்ஸ் பெக்டர் சுந்தரேசன் தனது காரில் சாராயம் மற்றும் மதுப்பாட்டில்களை புதுவையில் இருந்து வாங்கி வந்துள்ளார்.
மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.