முட்டையில் நூதன மோசடி.. 700 ரூபாய் முதலீடு வாரம் 6 முட்டை -ஆக்‌ஷனில் இறங்கிய குற்றப்பிரிவு போலீஸார்

மாதிரிபடம்

விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் அனுப்பிய பணத்திற்கு அவர்கள் எந்தவிதமான ரசீதையும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது.

  • Share this:
முட்டை மோசடியில் ஈடுபட இருந்த நிறுவனத்தின் முயற்சியை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

நாளிதழ் ஒன்றில் கடந்த 18-ம் தேதி Rafoll retails pvt ltd egg mart என்ற நிறுவனம் ஒரு முட்டையின் விலை 2.24 பைசா மட்டுமே எனவும் 700 ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 6 முட்டைகள், 1400 முதலீடு செய்தால் வாரம் 12 முட்டைகள், 2800 முதலீடு செய்தால் 24 முட்டைகள் டோர் டெலிவரி செய்யப்படும் என விளம்பரம் கொடுத்தது.

இந்த விளம்பரத்தை கண்ட பொதுமக்கள் பலர் குறைந்த விலையில் முட்டை கிடைப்பதாக நினைத்து  சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணத்தை முதலீடு செய்தனர். இதனை கண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி விளம்பரம் போல் இருப்பதாக நினைத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

Also Read:  அரசியலுக்கு ரெஸ்ட்.. பிசினஸில் கவனம் - மாஃபா பாண்டியராஜன் முடிவு

கடந்த 20 ஆம் தேதி நிறுவனரான அரக்கோணத்தை சேர்ந்த சிவம் நரேந்திரன் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். இவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் முறையான உரிமம் பெறாமல் திருமுல்லைவாயிலில் நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் அனுப்பிய பணத்திற்கு அவர்கள் எந்தவிதமான ரசீதையும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த விளம்பரத்தை பார்த்து தமிழகம் முழுவதும் 310 நபர்கள் திட்டத்திற்கேற்ப இந்த நிறுவன வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியது கண்டறியப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அனுப்பிய 4.5லட்ச ரூபாய் பணத்தை சம்மந்தப்பட்ட வங்கி கணக்கிற்கே போலீசார் திரும்ப அனுப்பினர். ஏற்கெனவே நரேந்திரன் இந்த நிறுவனத்தின் மூலமாக பலசரக்கு வியாபாரம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: மொட்டை கடிதத்தால் மாட்டிக்கொண்ட போலி பெண் வழக்கறிஞர் - ஷாக்கான பார் கவுன்சில்

இதனை தொடர்ந்து உரிமம் பெறாத கம்பெனியை மூடி, இந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இனி இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் பணத்தை அனுப்பமுடியாத படி செய்தனர்.
மேலும் குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக கூறி வரக்கூடிய கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் பணத்தை  இழக்க வேண்டாம் எனவும் தீர விசாரித்து பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: