Home /News /tamil-nadu /

கொரோனா பூஸ்டர் போட அழைப்பது போல செல்போன் மூலம் மோசடி - போலீசார் எச்சரிக்கை!

கொரோனா பூஸ்டர் போட அழைப்பது போல செல்போன் மூலம் மோசடி - போலீசார் எச்சரிக்கை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் தவணை முடிந்து ஒன்பது மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

  • News18
  • Last Updated :
    கொரோனா பூஸ்டர் போட அழைப்பது போல செல்போன் மூலம் ஓடிபி அனுப்பி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் புதிய வகை மோசடி நடந்து வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனாவின் புதிய வடிவமான ஓமைக்ரான் பரவி வருவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருகின்றன. அதேநேரம் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கும் மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன.

    கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் தவணை முடிந்து ஒன்பது மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி தற்போது முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அதே போல் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான பல்வேறு ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

    இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதைப் பயன்படுத்தி சில கும்பல்கள் மோசடியில் இறங்கியுள்ளன. பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு பூஸ்டர் போட விருப்பமா என்று கேட்டு ஓடிபி அனுப்புகிறது. அந்த ஓடிபியை சொல்லும்படி அந்தக் கும்பல் கேட்கும்போது, பூஸ்டர் தடுப்பூசிக்கானதுதானே என்ற நினைப்பில் மக்கள் அந்த ஓடிபி எண்ணைக் கூறி விடுகின்றனர்.

    Also read... உத்தர பிரதேசத்தில் பாஜகவை விட்டு விலகும் கட்சியினர்...!

    அந்த ஓடிபி மூலம் பயனாளரின் செல்போனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மோசடிக் கும்பல் அதன் மூலம் வங்கிக் கணக்கிற்குள் புகுந்து பணத்தை சுருட்டி விடுகிறது.

    அதனால், பூஸ்டர் டோஸ் போடும்படி செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் வந்தால் நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தெரியாத எண்ணில் இருந்து பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்பதற்கான லிங்க் வந்தால் அதையும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் தொழில்கள் முடங்கி தற்போதுதான் புத்துயிர் பெற்று வரும் நிலையில், மீ்ண்டும் கொரொனா பூஸ்டர் தடுப்பூசி பெயரில் சில கும்பல்கள் மோசடியில் இறங்கியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bank fraud, Corona Vaccine

    அடுத்த செய்தி