கோவையிலிருந்து சார்ஜா செல்ல இருந்த பயணியிடம் போதைப்பொருள் பறிமுதல்!

கோவையிலிருந்து சார்ஜா செல்ல இருந்த பயணியிடம் போதைப்பொருள் பறிமுதல்!

போதைப்பொருள் பறிமுதல்

விமான நிலையத்தின் வாயிலில் முதல்கட்ட சோதனையில் போதை பொருள் சிக்கி இருப்பதால் இந்த வழக்கை பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை இருந்து சார்ஜா செல்ல வந்த பயணியின்  பெட்டியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 1200 கிராம் Methamphetamine  போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 கோடி இருக்கலாம் என கூறப்படுகின்றது.

கோவையில் இருந்து சார்ஜா செல்ல திருச்சியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர்  இன்று அதிகாலை 3 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தார். கோவை விமான நிலையத்தில் வழக்கமான சோதனை நடத்தப்பட்டது.

அப்போது நாகரத்தினம் தன்னிடம் இருந்ந  ஒரு பெட்டியை, தனது நண்பருடயது எனவும், விமான நிலைய வாயிலில் என்னிடம் பெட்டியை கொடுத்தார் என தெரிவித்துள்ளார். இந்த பெட்டி மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் சூட்கேஸ்யை ஸ்கேன் செய்து பார்த்தனர்.  ஸ்கேனிங்கில் எந்தவித தடயமும் இல்லாத நிலையில், பெட்டியைத் திறந்து அதன் உட்பகுதியினை கிழித்து சோதனையிட்டனர். அப்போது  Methamphetamine என்ற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து திருச்சியை சேர்ந்த நாகரத்தினத்திடம் சி.ஐ.எஸ்.எப் மற்றும் சுங்கதுறை  அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடையது . இது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பிடிபட்ட நாகரத்தினத்திடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read... தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

விமான நிலையத்தின் வாயிலில் முதல்கட்ட சோதனையில் போதை பொருள் சிக்கி இருப்பதால் இந்த வழக்கை பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணி  நாகரத்தினம் , விமான நிலையத்தில் தனது நண்பர் சூட்கேஸினை கொடுத்தார் என்று அதிகாரிகளிடம் சொல்லி இருப்பதால் இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: