சென்னையில் 110 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை கொட்டிவாக்கம் குப்பத்தில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான 110 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 110 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்
  • News18
  • Last Updated: August 4, 2020, 7:58 PM IST
  • Share this:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் தடை செய்யப்பபட்ட ஆன்ஸ் குட்கா விற்பனை செய்வதாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் சரவணன்க்கு ரகசிய தகவல் வந்தது.

ரகசிய தகவலை தொடர்ந்து உதவி ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து தேடி வந்தனர்.  இந்நிலையில் கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் பெட்டிகடை ஒன்றை நடத்தி வரும் திருநெல்வேலியை சேர்ந்த குமார் என்பவர் தடைசெய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்தபோது தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரை நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது சென்னை பேரீஸ் பகுதியிலிருந்து வாங்கி வருவதாகவும் அதை சென்னை அடையார், திருவான்மியூர், நீலாங்கரை, பாலவாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது விசாரணையயில் தெரியவந்தது.


மேலும் கடையில் மளிகை சாமான்களோடு புகையிலை பொருட்களை ஆன்ஸ் குட்கா போன்ற போதை வஸ்துத்துகளை பதுக்கி வைத்திருந்தபோதுதான் தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தது.

Also read... கடலூர் கொலை - ஊராட்சி தலைவரின் கணவர் உள்ளிட்ட 14 பேர் கைது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நீலாங்கரை காவல் ஆய்வாளர் சரவணன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான 110 கிலோ எடையுள்ள சுமார் 10 லட்சம் மதிப்பிலான போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து குமாரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.ரகசிய தகவல் வந்ததை தொடர்ந்து அதிவிரைவாக செயல்பட்டு சுமார் 10 லட்சம் மதிப்பிலான போதை வஸ்துகளை பறிமுதல் செய்து விற்பனை செய்தவரை கைது செய்து துரிதமாக செயல்பட்ட நீலாங்கரை ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் தமிழன்பன், தலைமை காவலர்கள் பிரதீப், காவலர்கள் இன்பராஜ், கணேஷ் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாரட்டினர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading