கைதிகள் சொகுசு வாழ்க்கை எதிரொலி: பாளையங்கோட்டை சிறையில் ஆய்வு

பாளையங்கோட்டை சிறை

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நெல்லை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உதவி ஆணையர் தலைமையில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இது தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், சட்டவிரோதப் பொருட்கள் சிறைச்சாலைகளில் உலா வருவதைக் கட்டுப்படுத்த தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து சிறைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  கோவை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மத்திய சிறைகளில் சோதனைகள் நடைபெற்ற நிலையில் தற்போது,  பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் 60 போலீசார் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் காலை 6 மணி முதல் ஆய்வு செய்தனர். 2 மணி நேரமாக நீடித்த இந்த சோதனையில், சில கைதிகளிடம் இருந்து பீடி கட்டுகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  மேலும், தமிழகத்தில் உள்ள மற்ற சிறைகளிலும் சட்டவிரோதப் பொருட்கள் உலா வருவதைக் கட்டுப்படுத்த சோதனைகள் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: