Home /News /tamil-nadu /

ஊரடங்கை மீறி நடைபெற இருந்த கும்பாபிஷேகம்: தடுத்து நிறுத்திய போலீஸ்...

ஊரடங்கை மீறி நடைபெற இருந்த கும்பாபிஷேகம்: தடுத்து நிறுத்திய போலீஸ்...

போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது

போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது

நாகை அருகே ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாகை அருகே ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாகை அடுத்த பால்பண்ணைசேரியில் அமைந்துள்ளது அருள்மிகு முனீஸ்வரன் ஆலயம். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் நம்பிக்கைக்குரிய ஸ்தலமாக விளங்கி வந்த இவ்வாலயத்தின் திருப்பணிகள் கடந்த ஒருவருட காலமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், முருகன், விநாயகர், உள்ளிட்ட தெய்வங்களோடு, 10 அடி உயரமுள்ள முனீஸ்வரன் சிலை கட்டப்பட்டு வந்தது. திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்றைய தினம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டைவைகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு மேல் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது.

அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தை காண அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அங்கு குவிந்தனர். தகவல் அறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், யாகசாலை பூஜைகளை நிறுத்தியதுடன், விழாக்குழுவினரை வெளியேற்றி கோவிலை இழுத்து மூடினர்.

தொடர்ந்து கோவில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருந்திய வாகனம் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாகை அருகே ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Also read... திருச்சி - செங்கல்பட்டு ரயில்சேவை தொடக்கம்: எப்படி கடைபிடிக்கப்பட்டது தனிமனித இடைவெளி?






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி