மதுரையில் பூட்டிய விடுதிக்குள் பாலியல் தொழில் - மூவர் கைது

மதுரையில் பூட்டிய விடுதிக்குள் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த மூவரை கைது செய்த போலீசார் விடுதி உரிமையாளரை தேடி வருகின்றனர். 

மதுரையில் பூட்டிய விடுதிக்குள் பாலியல் தொழில் - மூவர் கைது
கைது செய்யப்பட்ட மூவர் மற்றும் விடுதி உரிமையாளர்
  • News18
  • Last Updated: August 27, 2020, 5:49 PM IST
  • Share this:
மதுரையில் ஊரடங்கு காரணமாக தங்கும் விடுதிகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், சில விடுதிகளில் தவறான செயல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த காவலர் திருப்பதி என்பவருக்கு மதுரை காக்கா தோப்பு ஸ்டார் டவர் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

அவர் அளித்த தகவலின் பேரில் திடீர்நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையில் அங்கு சென்ற தனிப்படையினர், சம்பந்தப்பட்ட விடுதியை ஆய்வு செய்த போது அறை எண் 303 மற்றும் 306-ல் 3 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.Also read... காதலை ஏற்க மறுத்த மாணவியின் தாயாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பள்ளி மாணவர்


இதைத்தொடர்ந்து அந்த மூன்று பெண்களை மீட்ட போலீசார் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பெண்களை அத்தொழிலுக்கு அழைத்து வந்த விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த குமார், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த முகமது ரிஸ்வான், மதுரை தசரதன்  ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பாலியல் தொழில் நடைபெறுகிறது என தெரிந்து அதற்கு அனுமதி அளித்த தங்கும் விடுதியின் உரிமையாளர் சிவக்குமாரை தேடி வருகின்றனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading