புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் - முத்துலட்சுமியின் மூத்த மகன் சிவகுமார் கடந்த ஆண்டு திடீரென உயிரிழந்ததால், குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
அந்த சூழலில் கடந்த பிப்ரவரியில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த மணி, முத்துலட்சுமிக்கு குறி சொல்வது போன்று, வீட்டில் புதையல் உள்ளதாகவும், அதை எடுத்தால் குடும்ப பிரச்னை நீங்குவதுடன், வசதியாக வாழலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய முத்துலட்சுமி ஆங்காங்கே கடன் வாங்கி 75,000 ரூபாய் கொடுத்து புதையல் எடுக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து, பிப்ரவரி இறுதியில் ஓர் இரவில் மணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் சேர்ந்து புதையல் எடுப்பதற்கு முன்பு பூஜைகள் செய்தனர். அப்போது, எலுமிச்சை பழத்தை அந்தரத்தில் மிதக்க விட்டு வித்தை காட்டி, நம்பவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர், முத்துலட்சுமியின் வீட்டின் பின்புறம் 5 அடிக்கு பள்ளம் தோண்டினர். பின்னர், தாங்கள் கொண்டுவந்த சிறிய சிலைகள் மற்றும் செம்பு நாணயங்களை குழிக்குள் இருந்து எடுத்ததாக கூறி அவரிடம் கொடுத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அத்துடன், ஒரு மாதத்திற்கு சாணம் மற்றும் களிமண்ணிற்குள் மூடிவைத்து அந்த தங்க சிலைகளை வழிபட அறிவுறுத்தினர். ஒரு மாதம் காத்திருந்து வழிபட்டு வந்த முத்துலட்சுமி, அதன் பின் சோதித்து பார்த்த போது, அவை அனைத்தும் தங்க சிலைகள் அல்ல பித்தளை என்பது தெரியவந்தது.
Also read... சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்களுக்கு கத்திக் குத்து - ஆம்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஜோசியம் பார்க்க வந்த மூன்று பேரும் போலி மந்திரவாதிகள் என்பதும் உறுதியானது. இதுதொடர்பாக முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், போலி மந்திரவாதிகள் மணி, முருகேசன், ராசு ஆகிய மூன்று பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 23 பித்தளை சிலைகள், 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
-செய்தியாளர்: ரியாஸ். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.