பொதுமக்களிடம் ஆதார் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று கடன் வாங்கி மோசடி செய்த போலி கால் சென்டர்!

ரகசிய விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.

பொதுமக்களிடம் ஆதார் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று கடன் வாங்கி மோசடி செய்த போலி கால் சென்டர்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 16, 2019, 12:02 PM IST
  • Share this:
சென்னை மேடவாக்கம் அருகே போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தாலப்பாக்கத்தில் கடந்த ஆறு மாதங்களாக ஃபீனிக்ஸ் கால் சென்டர் எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை சேகரித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு போன் செய்யும் ஊழியர்கள், கடன் பெற்றுத் தருவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து ஆசைவார்த்தை கூறி ஆதார் கார்டு, வங்கி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.


இதையடுத்து, தாங்கள் திரட்டிய ஆவணங்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல், தனியார் கால் சென்டர் நிறுவனம் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளது.

இந்த நிலையில், தங்கள் ஆவணங்களை வைத்து கடன் வாங்கப்பட்டு இருப்பதை அறிந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததன் பேரில், ரகசிய விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், அது என்ன நிறுவனம் என்பதை தெரியாமல் தங்களது மகள்கள் வேலை பார்த்ததாகவும், அவர்களுக்கும் மோசடிக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறினர்.Also see...

First published: October 16, 2019, 12:02 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading