மதுகுடிப்பதைத் தடுத்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலைசெய்ய முயன்றவர் கைது..

பெரம்பலூர் அருகே மது குடிப்பதை தடுத்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
பெரம்பலூர் அருகே மது குடிப்பதை தடுத்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே உள்ள சோமண்டாபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான சதீஷ்குமார். கார் ஓட்டுநரான இவரது மனைவி 27 வயதான வனிதா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள், 2 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமார் தினசரி குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபடுவார். மேலும் சம்பாதிக்கும் பணத்தையும் குடிக்கு செலவழித்தததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.


ஞாயிறன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார் மது அருந்தி விட்டு மதியம் வீட்டிற்கு வந்த சதீஷ்குமார், சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டார். மீண்டும் மது குடிக்க சென்று விடுவார் என்று பயந்த வனிதா, கணவரின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.

ஒரு மணி நேரம் கழித்து எழுந்த சதீஷ்குமார், தன் பாக்கெட்டில் இருந்த பணம் எங்கே என்று கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் மண்ணெண்ணெயை எடுத்து வனிதாவின் மீது ஊற்றி தீயும் வைத்து விட்டார்.

தீ மளமளவென்று பரவியவுடன், வலியால் அலறிய வனிதாவின் மீது சதீஷ்குமார் தண்ணீரை எடுத்து ஊற்றியுள்ளார். உடல் எரிச்சல் மற்றும் வலி தாங்க முடியாத வனிதா தனது தந்தைக்கு போன் செய்து வரவழைத்து, அதன் பிறகு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

வனிதா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read... ரூ.1 லட்சம் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ்.. ஐஜி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி..

குடிப்பழக்கத்தின் மீதான விருப்பத்தால், மனைவியை தீவைத்துக் கொலை செய்ய முயன்ற கணவரின் நடவடிக்கை சோமண்டாபுதுாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading