மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்த சொமேட்டோ ஊழியர் கைது!

மாதிரி படம்

ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீட்டை தேடி மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்து வந்த சொமேடோ ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகதில் முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் மதுபானத்தை விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை - கேஜி ரோடு சந்திப்பில் டிபி சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சொமேட்டோ பனியன் அணிந்து வந்த நபரை பிடித்து அடையாள அட்டை குறித்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் இவர் கொண்டு செல்லும் உணவு பெட்டியை சோதனை செய்து பார்த்த போது 10 பீர் பாட்டில்கள் இருந்தது. இதையடுத்து பீர் பாட்டிலை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணயில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ்(32) என்பது தெரியவந்தது.

Also read... இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் முடக்கமா? இனி யூஸ் பண்ண முடியாதா?

ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீட்டை தேடி மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது. உணவு கொடுப்பது போல் எடுத்து சென்றால் போலீசார் யாரும் சோதனை செய்யமாட்டார்கள் என எண்ணி சென்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து டி.பி சத்திரம் போலீசார் பிரசன்னா மீது வழக்குபதிவு செய்து கைது செய்த நிலையில் தற்போது ஜாமீனில் விடுவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: